Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள் விபத்து

பயிற்சி ஓட்டுநரால் நடந்த விபரீதம்… பேருந்தில்லாமல் தவித்த பயணிகள்… போராட்டத்தை கைவிட கோரி பேச்சுவார்த்தை…!!

உளுந்தூர்பேட்டையில் சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து தனியார் பேருந்து மீது மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து தனியார் பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாடு போக்குவரத்துக் கழக அனைத்து தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பேருந்துகளை பயிற்சி பெரும் ஓட்டுநர் வைத்து இயக்குகின்றனர். இந்நிலையில் உளுந்தூர்பேட்டை அரசு பணிமனை எதிரே வைத்து சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து மற்றொரு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இதனையடுத்து அவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அதன்பின் பேருந்தில் இருந்த மற்ற பயணிகள் சென்னை செல்வதற்கு பேருந்து கிடைக்காததால்  சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்துள்ளனர். இதுகுறித்து  தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பயணிகளை சமாதானப்படுத்தி மாற்று பேருந்து அமைத்து அனுப்பி வைத்துள்ளனர். எனவே போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்யுமாறு பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |