சேலம் அரசு மருத்துவமனையில் பயிற்சி டாக்டர்கள் ஒன்று சேர்ந்து பணி நீடிப்பை ரத்து செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் இறுதியாண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஓராண்டு பயிற்சி டாக்டராக பணிபுரிய வேண்டும். கடந்த 2011 ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ் படிப்பை முடித்தவர்கள் கடந்த மாதத்துடன் தங்களது பயிற்சியை நிறைவு செய்துள்ளனர். இதனையடுத்து கொரோனா காரணமாக அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகளிலும் பயிற்சி டாக்டர்களுக்கு பணி நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் பயிற்சி டாக்டர்களிடம் எந்தவித முன்னறிவிப்பும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் அரசு மருத்துவமனையில் உள்ள பயிற்சி டாக்டர்கள் ஒன்று சேர்ந்து நீட்டிப்பு பணியை ரத்து செய்ய கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவர்கள் பணி நீட்டிப்பு ரத்து செய்ய வேண்டும் என உள்ளிட்ட வாசகங்கள் எழுதிய அட்டைகளை கைகளில் ஏந்தி நின்று போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.