நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வந்தது. இதனிடையே உருமாறிய கொரோனா வகை ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது.
அதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அதன்படி பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மருத்துவமனையில் மேலும் 30 பயிற்சி மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 260 ஆக உயர்ந்துள்ளது.