Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பயிற்சி முடித்த ராணுவ வீரர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சேக்கல் மடத்து ஏலா பகுதியில் கூலி தொழிலாளியான ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஸ்ரீஜா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ரஞ்சித்(21) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஞ்சித் ராணுவத்தில் சேர்ந்து வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பெங்களூரு ராணுவ முகாமில் பயிற்சி முடித்த ரஞ்சித் உத்தரகாண்ட் மாநிலத்தில் வேலைக்கு செல்ல இருந்தார். எனவே விடுமுறையில் ரஞ்சித் ஊருக்கு வருவதாக இருந்தது.

ஆனால் கடந்த 29-ஆம் தேதி முகாமில் இருக்கும் அறையில் ரஞ்சித் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து ரஞ்சித்தின் உடல் ராணுவ அதிகாரி மணிகண்டன் தலைமையில் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு தகனம் செய்யப்பட்டது. மேலும் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் ரஞ்சித்துடன் பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள், திற்பரப்பு பேரூராட்சி தலைவர் பொன்.ரவி, வார்டு கவுன்சிலர்கள், செந்தில்குமார், ராஜப்பன் மற்றும் ஏராளமானார் கலந்து கொண்டனர்.

Categories

Tech |