Categories
தேசிய செய்திகள்

பயிற்சி வகுப்பில் 3 இளைஞர்களுடன் பழக்கம்…. 19 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்…. பெரும் பரபரப்பு….!!!!

ஹரியானா மாநிலத்தில் 19 வயது இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலத்தில் உள்ள விவாரி மாவட்டத்தில் பாவல் என்ற பகுதியில் ராணுவ தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தும் பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. அந்த பயிற்சி மையத்தில் ஜிந்தர், ரதிஷம், நீரஜ் ஆகிய மூன்று இளைஞர்கள் சேர்ந்துள்ளனர். இந்நிலையில் அந்த இளைஞர்களுக்கும் 19 வயது இளம்பெண்ணுக்கும் பயிற்சி வகுப்பில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு அந்த இளம் பெண்ணை கௌசாலா என்ற பகுதியில் உள்ள காட்டிற்கு இளைஞர்கள் மூன்று பேரும் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து யாரிடமாவது கூறினால் குடும்பத்தினரை கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி உள்ளனர்.

நீண்ட நாள் இது குறித்து யாரிடமும் கூறாமல் இருந்த அந்த இளம் பெண் இறுதியில் தனக்கு நடந்த கொடூரம் குறித்து கடந்த திங்கட்கிழமை குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் போலீசீர் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை செய்த மூன்று பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன. இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |