குப்பைகளை பிரித்து எடுக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
பயோமைனிங் முறையில் குப்பைகளை பிரித்து எடுக்கும் பணி பெருங்குடி குப்பை வளாகத்தில் நடைபெற்று வருகிறது. அதாவது இங்கு கொட்டப்படும் குப்பைகளில் இருந்து பயோமைனிங் முறையில் கல், மணல், இரும்பு, கண்ணாடி, ரப்பர், மரக்கட்டைகள், நெகிழி போன்றவைகள் பிரித்து எடுக்கப்படும். அதன்பிறகு மறுசுழற்சி செய்யப்படும். இந்த பணிகளை தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு நேற்று ஆய்வு செய்தார். இவர் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இதற்கு முன்பு பள்ளிக்கரணையில் இருக்கும் குப்பை கொட்டும் வளாகத்தில் நெகிழி மற்றும் திடப் பொருட்களை தனியாக பிரித்து பண்டல்களாக மாற்றும் இயந்திரத்தின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்தார். அதன்பிறகு மக்கும் குப்பைகளிலிருந்து உரம் தயாரிக்கும் மைக்ரோ கம்பஸ்ட் மையங்களையும் ஆய்வு செய்தார். மேலும் அடையாறு ஆற்றங்கரையில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருகிறது. அதை ஆய்வு செய்த தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு இந்த பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டார்.