Categories
தேசிய செய்திகள்

பயோ டீசலுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு… அரசு அதிரடி அறிவிப்பு….!!!

பெட்ரோலிய பொருள்கள் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர பட மாட்டாது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். லக்னோவில் 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கொரோனா சிகிச்சைக்கான மருந்துகளுக்கு அளிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி குறைப்பு டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

16 கோடி மதிப்பில் தசை சிதைவு நோய்க்கு வழங்கப்படும்இரண்டு மருந்துகளும் ஜி எஸ் டி யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பயோ டீசலுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஸ்விக்கி, ஜோமாடோ உள்ளிட்ட நிறுவனங்கள் மேற்கொள்ளும் உணவு டெலிவரிக்கு ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும் என கூறியுள்ளார்

Categories

Tech |