திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் கோவிலில் இன்று பரணி தீபம் ஏற்றப்பட்டது.
உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா ஒவ்வொரு வருடமும் மிக பிரசித்தி ஆக கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மிக எளிமையாக கொண்டாடப்பட உள்ளது. அதனால் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா முன்னிட்டு இன்று 2,668 அடி உயரமுள்ள மலை மீது மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
இதனையொட்டி இன்று காலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இத்தனை ஆண்டுகளில் முதல்முறையாக வெளியூர் பக்தர்கள் இல்லாமல் இந்த ஆண்டுதான் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற இருக்கிறது. கிரிவலம் செல்வதற்கும் முதல்முறையாக பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.