Categories
மாநில செய்திகள்

பரந்தூர்: புது விமான நிலையம்…. வெளியான புதிய அப்டேட்…..!!!!!!

பரந்துாரில் விமான நிலையம் உருவாக அதிகமான வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனிடையில் டில்லி, மும்பைநகரங்களை ஒப்பிடும்போது சென்னை விமான நிலையமானது போதுமான அளவிற்கு விரிவாக்கம் செய்யப்படவில்லை. இதனால் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய 2004 நிலம் தேர்வு மற்றும் கையகப்படுத்தும் பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியது. பொது மக்களின் தொடர்ச்சியான எதிர்ப்பினால் இதற்குரிய அரசாணைகளானது திருத்தப்பட்டுபுதிய விமான நிலையம் அமைப்பதே நிரந்தரதீர்வு என்ற சூழல் உருவாகியது. இதனால் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஸ்ரீ பெரும்புதுார் அருகில் புது விமான நிலையத்திற்கான நிலங்களை தேர்வு செய்யும் பணியானது 2008-ல் தொடங்கியது. விமானங்கள் வந்து செல்வதில் தடை எதுவும் இருக்காது எனும் அடிப்படையில் இதற்கான நிலங்கள் தேர்வு செய்யப்பட்டது.

ஆனால் இந்திய விமான நிலையங்கள் ஆணைக் குழு அதிகாரிகளின் ஆர்வமின்மை, அழுத்தமின்மை காரணமாக தமிழ்நாடு அரசு இதற்கான பணிகளில் மும்முரம் காட்டவில்லை. இதையடுத்து புதிய விமான நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு 4 இடங்களை மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது. அந்த வகையில் ஸ்ரீபெரும்புதுார் அடுத்த பன்னுார் அல்லது பரந்துார் ஒட்டிய கிராமங்கள், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர், மதுராந்தகம் அருகில் படாளம் ஆகிய இடங்கள் பரிந்துரைக்கப்பட்டது. இதனிடையில் செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் புதிய விமான நிலையம் அமைக்க தேவையான நிலங்களை கையகப்படுத்தி தர தயார் என்று தமிழ்நாடு அரசும், இந்திய விமான நிலையங்கள் ஆணையக் குழுவிடம் சில வருடங்களுக்கு முன் தெரிவித்தது. இங்கு விமானங்கள் வந்துசெல்வதில் சிக்கல் ஏற்படுமா என்பதற்கான சோதனைகளை மேற்கொள்ளவும் தமிழ்நாடு அரசு வலியுறுத்தியது.

எனினும் திருப்போரூர் வேண்டாமென இந்திய விமானம்நிலையங்கள் ஆணையக்குழுவின் டில்லி அதிகாரிகள் நிராகரித்து விட்டனர். தாம்பரம் விமானப்படை நிலையத்தின் வான்வெளி எல்லை, கல்பாக்கம் அணுமின் நிலையம் உள்ளது போன்றவை இதற்கு காரணமாக கூறப்பட்டது. அத்துடன் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே செய்யூர், படாளம் பகுதிகளில் 7,000 ஏக்கர் வரையிலான நிலத்தை கையகப்படுத்தி தர தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. இங்கு ஜிஎஸ்டி சாலை மற்றும் ரயில் பாதைக்கு இடைப்பட்ட பகுதியில் நிலங்கள் தேர்வு செய்யப்பட்டது. இங்கு ஏராளமானவை தனியார் பட்டா நிலங்களாகவும், சில பகுதிகள் வனத்துறை நிலங்களாகவும் உள்ளதால் கையகப்படுத்தும் பணியில் சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இப்பகுதி சென்னையிலிருந்து வெகு தொலைவில் இருப்பதாலும் வேறு சில தொழில்நுட்ப காரணங்களாலும் இறுதி முடிவு எடுக்கப்படாமல் இருக்கிறது.

அதே சமயத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் அடுத்த சுங்குவார்சத்திரம் அருகில் பன்னுார், பரந்துார் பகுதிகளில் புதிய விமான நிலையத்துக்கான நிலங்கள் தேர்வு செய்யப்பட்டது. தமிழக தொழில் முதலீட்டு கழகமான டிட்கோ இதற்குரிய பூர்வாங்க பணிகளை முடித்துள்ளது. பரந்துார், வளத்துார், ஏகனாபுரம், அக்கம்மாபுரம், தண்டலம், மடபுரம் ஆகிய கிராமங்களிலிருந்து 7 கி.மீ., நீளம், 4 கி.மீ., அகலத்தில் 7,000 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பன்னுார் (அல்லது) பரந்துாரை ஒட்டிய பகுதிகளில் புதிய விமானம்நிலையம் செயல்பட சாதகமான நிலை உள்ளதாக இந்திய விமானம் நிலையங்கள் ஆணையக் குழுவின் முதல்கட்ட ஆய்வு முடிவுகளும் தெரிவிக்கிறது. இந்த நிலையில் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் மத்திய சிவில் விமான போக்குவரத்துதுறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பேசியிருப்பதாவது, சென்னையில் 2-வது  விமான நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு பரிந்துரைத்த 4 இடங்களில் 2 இடங்கள் இறுதிகட்ட பரிசீலனையில் இருக்கின்றன.

இந்த இடங்கள் எவை என்பதை தமிழ்நாடு அரசுக்கு தெரிவித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை விரைவில் தொடங்குவோம். இதன் காரணமாக புது விமான நிலையம் அமைப்பது குறித்த திட்டம் விரைவில் உயிர்பெறும் என்று அவர் கூறினார். அந்த அடிப்படையில் மத்திய அரசின் இறுதிகட்ட பரிசீலனையில் பரந்துார் மற்றும் பன்னுார் உள்ளது உறுதியாகியுள்ளது. இவற்றில் பரந்துார் பகுதியில் பெரியளவிலான கட்டுமானங்கள் இல்லை. குறிப்பிட்ட சில பகுதிகள் மட்டுமே மக்கள் வசிப்பிடங்களாக இருக்கின்றன. ஆகவே காலியான இடங்கள் மிக அதிகம் ஆகும். எனவே பரந்துார் பகுதியில் புதிய விமான நிலையம் அமைவதற்கு அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று இந்திய விமான நிலைய ஆணையக்குழு மற்றும் மத்திய சிவில் விமான போக்குவரத்துதுறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Categories

Tech |