Categories
அரசியல் பல்சுவை மாநில செய்திகள்

பரபரக்கும் கருத்துக்கணிப்பு…. திமுகவை பின்னுக்கு தள்ளிய அதிமுக…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. மறுபக்கம் மக்களைக் கவர அனைத்து கட்சியினரும் மக்களிடம் நேரடி தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர்.

Democracy’ மற்றும் உங்கள் குரல் அமைப்புகள் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் அதிமுக 122 இடங்கள், திமுக 111 இடங்கள் வெல்லும் என்று தெரியவந்துள்ளதாக அதிமுகவின் ஐடி விங் டுவிட்டரில் செய்தி வெளியிட்டு உள்ளது. இதை அதிமுகவினர் வேகமாகப் பகிர்ந்து வரும் நிலையில் திமுக கூட்டணி 200+ என்ற ஹேஷ் டேக் டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது.

Categories

Tech |