சேலம் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் காவல் பார்வையாளராக சகேட் பிரகாஷ் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை முழுமையாக அமல்படுத்ப்பட்டு தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் காவல் பார்வையாளராக சகேட் பிரகாஷ் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து கெங்கவல்லி, ஏற்காடு, ஓமலூர், எடப்பாடி, வீரபாண்டி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, ஆத்தூர் என 11 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பொதுமக்கள், வேட்பாளர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தினமும் காலை 10 – 11 மணி வரை நேரில் சந்திக்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் நேரில் சென்று கண்காணிப்பு மற்றும் ஆய்வுப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.