தமிழக சட்டசபை கூட்டம் நாளை காலை 10 மணிக்கு தொடங்குகின்றது. கூட்டம் தொடங்கியவுடன் மறைந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவிற்கும், உத்தர பிரதேச முன்னாள் முதல் மந்திரி முலாயம் சிங் யாத மறைவிற்கும் அனுதாபம் தெரிவிக்கும் விதமாக இரங்கல் குறிப்பு வாசிக்கப்படுகிறது. அதன் பின் கோவை தங்கம் உள்ளிட்ட முன்னால் எம்எல்ஏக்கள் மறைவு பற்றியும் இரங்கல் தெரிவிக்கப்படுகிறது அதன் பின் சட்டசபையின் அன்றைய நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுகிறது. இதன் பின் 11 மணியளவில் அலுவல் ஆய்வு கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் சட்டசபை எத்தனை நாட்கள் நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது. அநேகமாக மூன்று நாட்கள் சட்டசபை கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாளை தொடங்கும் சட்டசபை கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கலந்துகொண்டு சபாநாயகர் உடன் வாக்குவாதம் செய்து சட்டசபை புறக்கணிக்க கூடும் என்ற தகவல்கள் வெளியாகி வருகிறது. அதற்கான காரணம் அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ பன்னீர் செல்வத்திற்கும் இடையே ஏற்பட்ட முதல் தற்போது சட்டசபையிலும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் அதிமுகவில் இருவரும் ஒருவரை ஒருவர் கட்சியிலிருந்து நீக்கிக் கொண்டது மட்டுமல்லாமல் இது பற்றி சபாநாயகருக்கும் கடிதம் அனுப்பி இருக்கின்றனர்.