Categories
பேட்மிண்டன் விளையாட்டு

பரபரப்பான ஆட்டம்…. “உலக சாம்பியனை வீழ்த்திய இந்திய வீரர் பிரனோய்”…. காலிறுதிக்கு முன்னேறி அசத்தல்..!!

ஜப்பான் ஓபன் பேட்மிட்டன் போட்டி ஒசாகா நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போட்டியின் முதல் சுற்றில் இந்திய வீரர் பிரனோய்‌, என்ஜி கா லாங் அங்கஸ்‌ உடன் மோதினார். இந்த போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது என்ஜி கா லாங் அங்கஸ்‌ காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறினார். இதனால் இந்திய வீரர் பிரனோய் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இந்த போட்டியில் பிரனோய் வெற்றி பெற்றதால் கால் இறுதி சுற்றுக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் இந்திய வீரர் பிரனோய் முன்னாள் உலக சாம்பியனும் உலகின் 7-ம் நிலைவீரரும் சிங்கப்பூரைச் சேர்ந்த லோ கீன்‌ யூவுடன் மோதினார். இந்த போட்டியில் இந்திய வீரர் பிரனோய் 22-20, 21-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். மேலும் காலிறுதி சுற்றில் பிரனோய் உலக பேட்மிட்டனில் வெண்கல பதக்கம் வென்ற சவ்தியென் சென்னுடன் மோதுகிறார்‌

Categories

Tech |