Categories
உலக செய்திகள்

பரபரப்பான சாலையில் நடந்த பயங்கரம்…. தப்பிச் சென்ற மர்ம நபர்… விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர்….!!

அமெரிக்காவில் பரபரப்பான சாலையில் துப்பாக்கிச்சூடு நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா நியூயார்க்கில் பரபரப்பான சாலையில் பகலில் மர்மநபர் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இந்த துப்பாக்கி சூட்டில் காயம்பட்டவர்கள் எத்தனை பேர்  என்பதும் அவர்களின் நிலை குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில் காவல் வாகனத்தை பார்த்தவுடன் அந்த மர்மநபர் காரில் தப்பி சென்றுவிட்டார் என தெரிவித்துள்ளனர்.

மேலும் அங்கிருந்த குடியிருப்பு மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்து குடியிருப்பை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் தெரிவித்துள்ளனர் இந்நிலையில் இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |