Categories
அரசியல் மாநில செய்திகள்

பரபரப்பான சூழலில் தொடங்கும்…. அதிமுக செயற்குழு கூட்டம்…. எகிறும் எதிர்பார்ப்பு…!!!!

அதிமுக செயற்குழுக் கூட்டம் இன்று தொடங்குகிறது. அதிமுக செயற்குழுக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடக்கின்றது. கடந்த நவம்பர் 24ல் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மோதல் ஏற்பட்ட நிலையில் இன்று காலை 10 மணிக்கு அதிமுக செயற்குழுக் கூட்டம் தொடங்குகிறது. ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை  ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ்  தலைமையில் ஆலோசனை நடத்தப்பட உள்ளன. இந்த கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், அதிமுக உட்கட்சி தேர்தல் உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.

மேலும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு கூடுதல் பொறுப்பு கொடுப்பது தொடர்பாகவும் கூட்டத்தில் பேசப்பட்ட உள்ளது.  கட்சியின் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். அதிமுக செயற்குழு கூட்டம் முதல்முறையாக அவைத்தலைவர் இல்லாமல் நடைபெறுகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுசூதனன் மறைந்த பிறகு அவைத்தலைவர் இல்லாமல் கூடும் முதல் செயற்குழு கூட்டம் இதுவாகும். இதில் புதிய அவைதலைவர்கள் நியமனம், அதிமுக உட்கட்சி தேர்தல் அறிவிப்பு, அதிமுக  கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த மாணிக்கத்திற்கு பதிலாக யாரை நியமனம் செய்வது என்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. அதேபோல் அதிமுக செயற்குழு கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றுவதற்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |