Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பரபரப்பான மேட்ச்….. “படிக்கட்டில் கட்டிப்பிடித்து கொண்டாடிய கோலி, ரோஹித்”…. ரசிகர்களே புரிஞ்சிக்கோங்க…. செம வைரல்…!!

இந்திய அணி வெற்றி பெற்றதைக் கொண்டாடிய விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்த ஆஸ்திரேலியா அணி 3 போட்டியில் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று ஆடியது. இதில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவும், 8 ஓவர்களாக நடைபெற்ற 2ஆவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றது.  எனவே இரு அணிகளும் 1-1 என்று சமநிலையில் இருந்தது. இந்நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி 3ஆவது டி20 போட்டி ஹைதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது.. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது..

அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 186 ரன்கள் குவித்தது. பின்னர் இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோஹித் 17 மற்றும் கேஎல் ராகுல் 1 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இருப்பினும் விராட் கோலி  மற்றும் சூரியகுமார் யாதவ் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினர்.. அதிரடியாக ஆடி வந்த சூர்யகுமார் 36 பந்துகளில் (5 சிக்ஸர், 5 பவுண்டரி) 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.. பின் கோலி- பாண்டியா கூட்டணி சிறப்பாக ஆடி வெற்றியை நோக்கி கொண்டு சென்றது..

இறுதியில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 6 பந்துகளில் 11 ரன்கள் தேவைப்பட்டது. டேனியல் சாம்ஸ் வீசிய முதல் பந்தை கோலி சிக்சருக்கு தூக்கினார். பின் அடுத்த பந்தே பிஞ்ச்சிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாகி வெளியேறினார் கோலி 63 (48). அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் 1 சிங்கிள் எடுத்து பாண்டியாவிடம் ஸ்ட்ரைக் கொடுத்தார்.. 3 பந்துகளில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 4ஆவது பால் டாட் ஆனது.. திக் திக்குடன் ரசிகர்கள் பார்த்துகொண்டிருக்கின்றனர்.. அதேபோல படிக்கட்டிலும் கோலி, ரோஹித் இருவரும் பரபரப்பாக பார்த்துகொண்டிருக்கின்றனர்.. அப்போது 2 பந்துகளில் 4 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட, சாம்ஸ் பந்தை ஒய்டாக வீச, பாண்டியா பேட்டை கட்சிதமாக திருப்பி சூப்பராக வீச ஸ்லிப்பருக்கு  இடையே பின்னால் சென்று  பவுண்டரி ஆனது.. இதனால் 19.5 ஓவரில் 187/4 ரன்கள் எடுத்து வென்றது இந்தியா.. இதனால் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதைக் கொண்டாடிய விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. ஆம், கோலியும், ரோஹித்தும் மைதானத்தில் படிக்கட்டுகளில் ஒருவரையொருவர் கட்டித்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.. முன்னதாக கோலி ஆட்டமிழந்து மைதானத்தின் படிக்கட்டில் சென்றபோது, கோலியின் முதுகை தட்டி பாராட்டினார் ரோஹித்..

அவர்களின் இந்த கொண்டாட்டத்திற்கு ட்விட்டரில் வீடியோவை பகிர்ந்து பதிலளித்த இந்திய அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா, “இந்த இருவருக்கும் இடையிலான பந்தம் முழுமைக்கு அப்பாற்பட்டது. இதை ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர் இந்தியாவின் பவர் பேக் பேட்டிங் யூனிட் உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வலுவாக உள்ளது. நம்புகிறீர்களோ, இல்லையோ உலகக் கோப்பைக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்..  முன்னதாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரது ரசிகர்களும் சமூக வலைதளங்களில் சண்டை போட்டு வருவது வழக்கமாக வைத்திருந்தனர். இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக இருப்பதாக பல வதந்திகளை பரப்பி வந்தனர். பின்  ரோகித் கேப்டனான பின் அவர்மீது கோலி ரசிகர்களுக்கு அதிருப்தி நிலவியது. ஆனால் தற்போது கடந்த கால நினைவுகளை பார்க்கும்போது அப்படி எதுவும் இல்லை என்பதுபோல தோன்றுகிறது. இருவரும் மாறி மாறி ஒருவருக்கொருவர் புகழ்ந்து வருகின்றனர்… இதனை வைத்து தான் அமித் மிஸ்ரா இந்த கருத்தை தெரிவித்துள்ளார்..

Categories

Tech |