சட்டமன்ற தேர்தலில் முதல்வர் யார் என்ற விவாதம் எழுந்த நிலையில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோருடன் அமைச்சர்கள் நடத்திய ஆலோசனைக்கு பிறகு அறிக்கை வெளியாகியிருக்கிறது. முன்பாக மூத்த அமைச்சர்கள் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தை அவரின் இல்லத்தில் சந்தித்து பேசினார். அதனைத் தொடர்ந்து முதலமைச்சரின் இல்லத்திற்குச் சென்ற அமைச்சர்கள் அவரையும் சந்தித்தார்கள். மீண்டும் துணை முதல்வர் இல்லத்திலும், முதல்வர் இல்லத்தில் இந்த சந்திப்பு அடுத்தடுத்து நடைபெற்தரு பல்வேறு பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
இந்நிலையில் சிறிது நேரத்தில் அதிகாரபூர்வ அறிக்கை வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு இருந்து நிலையில் பரபரப்புக்கு இடையே ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த அறிக்கையில் கடந்த சில நாட்களாக நிர்வாகிகள் சிலர் எந்த பின்னணியும் இல்லாமல் கூறிய சில கருத்துக்கள் மாற்றாருக்கு பெரும் விவாதப் பொருளாக மாறிவிட்டன. அத்தகைய நிலை மீண்டும் ஏற்பட்டுவிடாமல் வண்ணம் ஜெயலலிதா அவர்களுடைய காலத்தில் இருந்ததைப் போன்று ராணுவ கட்டுப்பாட்டுடன் தலைமையின் முடிவுக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி , ஓ பன்னீர்செல்வம் இருவரும் தற்போது இந்த அறிக்கையின் வாயிலாக கூறிப்பிடுள்ளார்கள்.
கடந்த சில நாட்களாக கழக நிர்வாகிகள் சிலர் எந்த பின்னணியும் இன்றி கூறிய சில கருத்துக்கள் மாபெரும் விவாதப் பொருளாக மாறிவிட்டன. அத்தகைய நிலை மீண்டும் ஏற்பட ஏற்பட்டுவிட கூடாது. ஜெயலலிதா காலத்தை போல ராணுவ கட்டுப்பாட்டுடன் தலைமையின் முடிவுக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். கட்சியின் அனைத்து முக்கிய கொள்கை முடிவுகளையும், கூட்டணி குறித்து நிலைப்பாடுகளையும், ஜெயலலிதா அவர்கள் காட்டிய வழியில் ஜனநாயக ரீதியில் கழகத்தின் தலைமை விரிவாக ஆலோசித்து கழகத் தொண்டர்களின் மன உணர்வுகளை எதிரொலிக்கும் வகையில் சிறப்பான முடிவுகளை மேற்கொள்ளும் என்றும், சிறு சலசலப்புக்கும் இடம் தராமல் நம்மை வீழ்த்த நினைத்தவர்களுக்கு வாய்ப்பளிக்காமல் ஒன்றுபட்டு உழைக்க உங்களை எல்லாம் அன்போடு கேட்டுக் கொள்வதாக இபிஎஸ் ஓபிஎஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.