அமெரிக்காவில் நடைபெற்ற நாடாளுமன்ற இடைத்தேர்தலில் மேரி பெல்டோலா வெற்றி பெற்றுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகள் சபையில் எம். பி.யாக அலாஸ்கா மாகாணத்தை சேர்ந்த டான் யெங் இருந்து வந்தார். இவர் கடந்த மார்ச் மாதம் மரணம் அடைந்தார். இதனால் அங்கு கடந்த 16-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் மேரி பெல்டோலாவும், எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் அதன் மூத்த தலைவர்களில் ஒருவரான சாரா பாலினும் போட்டியிட்டனர். இதில் சாரா பாலின் அலாஸ்கா மாகாணத்தின் கவர்னராக இருந்தவர். மேலும் கடந்த 2008 -ஆம் ஆண்டு ஜனாதிபதி பதவிக்கு ஜான் மொக்கைனுக்கு எதிராக போட்டியிட்டவர். இதனால் தேர்தலில் கடும் போட்டி நிலவி வந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் வாக்குகள் என்னப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதில் மேரி பெல்டோலா வெற்றி பெற்றார். இதனால் கடந்த 50 ஆண்டுகளாக குடியரசு கட்சியின் வசம் இருந்த அலாஸ்கா மாகாணம் தற்போது ஜனநாயக கட்சி வசம் வந்துள்ளது. இந்த தோல்வி சாரா பாலினுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. ஆனால் வெற்றி பெற்றுள்ள மேரி பெல்டோலா, நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் அலாஸ்காவை சொந்த மாகாணமாக கொண்ட முதல் எம்.பி. என்ற சிறப்பை பெறுவார். அதே நேரத்தில் இவரது பதவிக்காலம் நவம்பர் வரையில்தான். நவம்பர் 8-ந் தேதி அமெரிக்காவில் பொதுத்தேர்தல் வர இருப்பது குறிப்பிடத்தக்கது.