வடகொரியா இந்த வருடம் தொடங்கியிலிருந்து தற்போது வரை முப்பதற்கும் அதிகமான ஏவுகணைகளை ஏவி சோதனை மேற்கொண்டுள்ளது. முன் இல்லாத அளவிற்கு இந்த வருடம் சோதனையை தீவிரப்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் வடகொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள தயாராகும் விதமாக அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கடற்படைகள் கொரிய எல்லையில் கூட்டுப் போர் பயிற்சி ஈடுபட்டு இருக்கின்றனர்.
மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த 25 ஆம் தேதி குறுகிய தூரம் செல்லக்கூடிய பிளாஸ்டிக்கை வடகொரியா சோதனை மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் வடகொரியா நேற்று மீண்டும் ஏவுகணை சோதனை மேற்கொண்டுள்ளது. இந்த தகவல் தென்கொரியா ராணுவம் கூறியுள்ளது இருப்பினும் ஏவுகணை சோதனை எங்கு நடத்தப்பட்டது எந்த வகை ஏவுகணை சோதனை என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. மேலும் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் இன்று தென் கொரியாவிற்கு செல்ல இருக்கின்ற நிலையில் வடகொரியா இந்த ஏவுகணை சோதனை நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.