Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பரபரப்பு!!…. எங்களுக்கு நிழற்குடை அமைத்து தர வேண்டும்….. தி.மு.க. பொறுப்பாளரை முற்றுகையிட்ட கிராம மக்கள்…..!!!!!

பயணிகள் நிழற்குடை அமைத்து தரக்கோரி  பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள காவினியாத்தூர் கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இருந்த பயணிகள் நிழற்குடை கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடிந்து விழுந்துவிட்டது. இதனால் தற்போது பயணிகள் நிழற்குடை இல்லாமல் மழை மற்றும் வெயில் காலங்களில் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம்  பலமுறை மனு அளித்து விட்டனர்.

ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால்  ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று வந்தவாசி-ஓரத்தி சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் தரணிவேந்தன் வந்துள்ளார். இதனையடுத்து பொதுமக்கள் அவரை முற்றுகையிட்டு பயணிகள் நிழற்குடை கட்டித் தர வேண்டும் என கூறியுள்ளனர். இதனை கேட்டு அவர் விரைவில் பயணிகள் நிழற்குடை அமைக்க  நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் உறுதியளித்துள்ளார். அதன்பின்னர் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து  சென்றுள்ளனர். இதனால் வந்தவாசி-ஒரத்தி சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |