அமெரிக்காவிற்குள் சட்டத்திற்குப் புறம்பாக கனடாவிலிருந்து நுழைய முயன்ற குழந்தை உட்பட 4 இந்தியர்கள் அந்நாட்டின் எல்லையில் கடும் குளிரில் சிக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவிற்குள் தேவையான ஆவணங்களின்றி நுழைந்த நபர்களிடம் அந்நாட்டு அதிகாரிகள் விசாரணை செய்தபோது திடுக்கிடும் உண்மை ஒன்று வெளிவந்துள்ளது.
அதாவது அமெரிக்காவிற்குள் சட்டத்திற்குப் புறம்பாக கனடாவிலிருந்து நுழைய முயன்ற குழந்தை உட்பட 4 இந்தியர்கள் அந்நாட்டின் எல்லையில் கடும் குளிரில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள்.
இந்நிலையில் இந்திய தூதரகம் அமெரிக்கா, கனடா அதிகாரிகளிடமிருந்து இந்த சம்பவம் தொடர்புடைய தகவலை தொடர்ந்து சேகரித்து வருவதாக தெரிவித்துள்ளது.