பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னமராவதி பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் திவ்யா பலரிடம் வாக்கிய கடனை திரும்ப செலுத்த முடியவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் திடீரென தனது வீட்டில் வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திவ்யாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.