Categories
மாநில செய்திகள்

பரபரப்பு!!….. டுவிட்டரில் நடைபெற்ற வார்த்தை சவால் போட்டி…. சவாலை ஏற்ற அரசியல் கட்சியினர்….!!!!

ஒரு வார்த்தை சவாலில் தமிழக அரசியல் கட்சியினரும் பங்கேற்று உள்ளனர் .

அமெரிக்காவை சேர்ந்த  ஒரு ரயில் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் ரயில் என்ற  ஒரு வார்த்தையை பதிவு செய்து அனைவரையும் சவாலுக்கு அழைத்தது. இந்நிலையில்  உலகம் முழுவதும் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் அந்த சவாலை ஏற்று அவர்களுடைய கொள்கை மற்றும் விருப்பத்தை தெரிவிக்கும் வகையில் ஒரு வார்த்தையை  பதிவு செய்தனர். இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் ஜனநாயகம் என்ற வார்த்தையையும், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் என்ற வார்த்தையை பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்த சவாலில் நமது தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் திராவிடம் என்ற வார்த்தை பதிவு செய்தார். மு.க. ஸ்டாலின் அவர்கள் திராவிடம் என்று குறிப்பிடும் போதெல்லாம் எதிர்க்கட்சி தலைவரான  எடப்பாடி பழனிச்சாமி ஏன் திராவிடம் என்று குறிப்பிட வேண்டும். அதற்கு தமிழ்நாடு என்று குறிப்பிடலாமே என்ற கேள்வி எழுப்புவார். அதன் அடிப்படையில் அவர் தமிழ்நாடு என்ற வார்த்தையை  பதிவு செய்துள்ளார்.

மேலும் எடப்பாடி பழனிச்சாமியை  எதிர்த்து அரசியல் செய்துவரும் ஓ.பன்னீர்செல்வம் அவருக்கு வேண்டுமானால் நிர்வாகிகள் பலர் இருக்கலாம். ஆனால் எனக்கு தொண்டர்கள் பலம் இருக்கிறது என்பதை உணர்த்தும் வகையில் தொண்டர்கள் என்ற வார்த்தையை பதிவு செய்துள்ளார். இதனையடுத்து அதிமுகவினர்   அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று சசிகலா ஒற்றுமை என்ற வார்த்தை பதிவு செய்தனர். மேலும் பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை தமிழன் என்ற வார்த்தையையும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் வறுமை ஒழிப்பு என்ற வார்த்தையையும், அமமுக  பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அம்மா என்ற வார்த்தையையும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ் தேசியம் என்ற வார்த்தையையும் பதிவு செய்துள்ளனர்.

Categories

Tech |