கல்லூரி விடுதியில் மாணவர்கள் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழசிவல்பட்டி பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் உள்ள விடுதியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு கல்லூரி விடுதியில் இரவு சாப்பாடாக தக்காளி சாதம் வழங்கப்பட்டுள்ளது. இதனை சாப்பிட்ட 9 மாணவர்களுக்கு திடீரென வாந்தி-மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த மாணவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.