கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 52 பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவமாடி வருகின்றது. இதனால் மக்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர். இதையடுத்து ஒரு சில தடுப்பு மருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன நிலையில் இந்தியாவில் மக்களுக்கு தடுப்பு ஊசி போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் டெல்லியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 52 பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதால் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் தடுப்பூசி போட்டுக்கொண்ட 22 வயது காவலர் ஒருவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது 52 பேருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டு உள்ளது.