ரயில் தண்டவாளத்தில் இறந்து கிடந்த மூதாட்டியின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் காவிரி ரயில் நிலையம் ஒன்று அமைந்துள்ளது . இந்த ரயில் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று ரயில் நிலையத்தில் அமைந்துள்ள தண்டவாளத்தில் மூதாட்டி ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உயிரிழந்த அந்த மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் உயிரிழந்த மூதாட்டி நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த லட்சுமி என்பதும், தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயிலில் மோதி உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.