கூலி தொழிலாளி தனது மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் கல்லூரி மாணவர்கள், படித்தவர்கள், முதியவர்கள் என அனைவரிடமும் மதுப்பழக்கம் உள்ளது. இதனால் அவர்கள் குடும்பம் மட்டுமின்றி அவர்களை சுற்றி இருப்பவர்களும் பாதிக்கப்படுகின்றனர். . இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆத்துவாம்பட்டி கிராமத்தில் கூலித்தொழிலாளியான மாடசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இந்நிலையில் நேற்று மாடசாமி அதே பகுதியில் அமைந்துள்ள டாஸ்மார்க் கடையில் மது குடித்துவிட்டு வெளியே வந்துள்ளார். அப்போது வாசலில் இருந்த தனது மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் நீண்ட நேரம் போராடி தீயை அனைத்தனர். ஆனால் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து நாசமாகியது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.