Categories
சினிமா விமர்சனம்

பரபரப்பு திருப்பங்களுடன் “ரெண்டகம்” படத்தின் சினிமா விமர்சனம்…. எப்படி இருக்குன்னு பாருங்க?….!!!!

நடிகர் அரவிந்த்சாமி நடிப்பில் இயக்குநர் பெல்லினி இயக்கத்தில் மலையாளத்தில் “ஒட்டு” என்ற பெயரில் வெளியாகிய திரைப்படம் தான் “ரெண்டகம்”. குஞ்சக்கோ போபன் காதலியுடன் வெளிநாடு சென்று செட்டில் ஆக ஆசைப்பட்டு செலவுக்கு பணம் தேடுகிறார். இந்நிலையில் மர்மகும்பல் அவரை அணுகி துப்பாக்கி சண்டையில் அசைனார் என்ற தாதா கொல்லப்பட்டுவிட்டதாகவும், அவருடைய உதவியாளரான அரவிந்த்சாமி தலையில் அடிபட்டு பழைய நினைவுகளை மறந்து போய் உள்ளதாகவும் கூறுகிறது. இதற்கிடையில் அரவிந்த்சாமியிடம் பழகி பழைய நினைவுகளுக்கு கொண்டுவந்து அசைனார் வசமிருந்த தங்க புதையல் விபரங்களை அறிந்து தங்களிடம் சொன்னால் நிறையபணம் தருகிறோம் என ஆசைகாட்டுகிறது.

அதனை போபன் ஏற்றுக்கொண்டு அரவிந்த்சாமியிடம் பழகி பழைய நினைவுக்கு கொண்டுவர முயற்சிக்கிறார். துப்பாக்கிசண்டை நடைபெற்ற இடத்துக்கு அழைத்து சென்றும் சுற்றிகாட்டுகிறார். இந்த நிலையில் அரவிந்த்சாமி நான் தான் அசைனார் என கூறி போபனுக்கு அதிர்ச்சிகொடுக்கிறார். அரவிந்த்தாமி மற்றும் போபனுக்கு என்ன தொடர்பு?.. நினைவு இழந்தவராக அவர் நடித்தது ஏன்..? என்பதற்கு விடையாக மீதிகதை. இதனிடையில் அரவிந்த்சாமி கதாபாத்திரத்தில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்துகிறார். தொடக்கத்தில் அப்பாவியாக வந்து பிற் பகுதியில் தான் யார் என்பதை வெளிப்படுத்தும் போது அதிரவைக்கிறார்.

போபனிடம் காட்டும் பாசம், ரவுடிகளை துவம்சம்செய்யும் ஆவேசம், ஜாக்கி ஷெராப் கோட்டைக்குள் நுழைந்து குரூரமாக கொல்லும் கோபம் என காட்சிக்கு காட்சி அனுபவ நடிப்பால் கவர்கிறார். குஞ்சக்கோ போபன் உடல், மொழி, ஹேர்ஸ்டைலில் வித்தியாசம் காட்டி இருக்கிறார். கிளைமாக்சில் இன்னொருமுகம் காட்டி நிமிர வைக்கிறார். அரவிந்த்சாமி, குஞ்சாக்கோ போபன்ஆடுகளம் நரேன், ஈஷா ரெபா கதாபாத்திரங்களின் திருப்பங்கள் எதிர்பாராதவை ஆகும். ஆரம்பத்தில் மெதுவாக போகும் கதையை போகப் போக பதற்றம், திருப்பங்களுடன் மும்முரமாக நகர்த்தி இயக்குனர் பெல்லினி கவனம் பெறுகிறார். கவுதம்ஷங்கரின் ஒளிப்பதிவு பயணம் மற்றும் கடற்கரையை அழகாக படம்பிடித்துள்ளது.

Categories

Tech |