Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

பரபரப்பு… நடிகை அமலாபாலுக்கு பாலியல் தொல்லை…. நண்பரை தூக்கிய போலீஸ்…. 11 பேருக்கு வலை..!!

நடிகை அமலாபாலுக்கு துன்புறுத்தல் கொடுத்ததாக அவரது முன்னாள் காதலன் பவ்நீந்தர் சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.

நடிகை அமலா பாலுக்கு விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே சொந்தமாக ஒரு வீடு இருக்கிறது. அங்கு ஆண் நண்பர்களோடு அமலாபால் தங்கி இருப்பது வழக்கம் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் அங்கு தங்கி இருந்த அவருடைய ஒரு ஆண் நண்பர், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் பகுதியை சேர்ந்த பவிந்தர் சிங் என்பவர் அமலா பாலுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், அமலா பாலுடன் எடுத்துக்கொண்ட அந்தரங்க புகைப்படத்தை வெளியிடுவதாக மிரட்டுவதாகவும், பண மோசடி செய்ததாகவும் அமலா பாலின் உடைய மேலாளர் ஒரு புகாரை விழுப்புரம் மாவட்டம் காவல் துறை கண்காணிப்பாளரிடம் அளித்துள்ளார்.. 15 பக்கங்கள் கொண்ட அந்த புகாரை தொடர்ந்து போலீசார் அந்த ஆண் நண்பரை தேடி வந்தனர்.. இந்த நிலையில் ஜெய்ப்பூர் பகுதியை  சேர்ந்த பவிந்தர் சிங்கை தற்போது போலீசார் கைது செய்துள்ளார்கள். அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த 2018 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து அவர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாகவும், அதற்குப் பிறகு திரைப்படத்துறை சார்பாக பல நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பண மோசடியில் ஈடுபட்டதாகவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகாரின் முழு விவரம் போலீசார் வெளியிடவில்லை. அமலாபாலினுடைய மேலாளராக இருக்கக்கூடிய விக்னேஷ் என்பவர் இந்த புகாரை அளித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இன்றைக்குள்  விசாரணை முழுமையாக முடிவடைந்து சிறையில் அடைக்கப்படுவார் என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும் 11 பேர் மீது மொத்தம் பவிந்தர் சிங் உட்பட 12 பேர் மீது இந்த புகார் கொடுக்கப்பட்டுள்ளது.. மீதமுள்ள 11 பேரை தேடி வருவதாக மாவட்ட காவல்துறை தெரிவித்து இருக்கிறது.

Categories

Tech |