Categories
தேசிய செய்திகள்

பரபரப்பு.! நரபலி கொடுக்கப்பட்ட 2 பெண்களை…. “பச்சையாக சாப்பிட்ட கொடூரம்”…. அதிரும் கேரளா..!!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள திருவில்லா பகுதிகளில் கொலை செய்யப்பட்ட இரண்டு பெண்களின் உடல்களை டாக்டர் தம்பதி உட்பட 3 பேர் பச்சையாக சாப்பிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

கேரளாவில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் ஒட்டு மொத்த கேரளா முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி இருந்த சூழலில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது செய்யப்பட்ட 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.. அந்த விசாரணையில் மிகப்பெரிய ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.. அதாவது இந்த வழக்கில் பகவால்  சிங் மற்றும் அவரது மனைவி லைலா மற்றும் அகமது முகமது ஷபி 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்..

இந்த சூழலில் பகவால் சிங்கின் மனைவி லைலாவிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட 2 பெண்களை உடல்களை, மனிதக் கறியை பச்சையாக சாப்பிட முகமது ஷபி வலியுறுத்தியதாகவும், அந்த உடலை சமைத்து சாப்பிடலாம் என கூறியதற்கு ஒரு மந்திரப் புத்தகத்தை எடுத்து வைத்து அந்த மந்திர புத்தகத்தில் பச்சையாக சாப்பிட கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மூன்று பேரும் உடல்களை பச்சையாக சாப்பிட்டோம் என்று லைலா தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். மேலும் நரபலி கொடுத்த பின் பத்மா, ரோஸ்லின் ஆகிய 2 பேரின் உடல்களில் இருந்த நகைகளை எர்ணாகுளம் மற்றும் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள வங்கிகளில் அடகு வைத்து அந்த பணத்தையும் செலவு செய்துள்ளதாக லைலா வாக்குமூலம் அளித்துள்ளார்..

தற்போது இந்த வாக்குமூலம் ஒட்டுமொத்த கேரளாவையும்  அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.. தற்போது மூன்று பேர்  எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், மேலும் 10 நாட்கள் தங்கள் கஸ்டடிக்குள் வைத்து விசாரணை நடத்த வேண்டும் என காவல்துறையினர் நீதிமன்றத்தில் வலியுறுத்தி வருகின்றனர்..

Categories

Tech |