Categories
உலக செய்திகள்

“பரபரப்பு!..” நாங்கள் மாஸ்க் போடமாட்டோம்.. அனைத்தையும் எரித்து மக்கள் போராட்டம்..!!

அமெரிக்காவில் 200 க்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து முகக்கவசங்களை தீயில் எரித்து போராட்டம் நடத்தியுள்ளனர். 

அமெரிக்காவில் உள்ள Idaho என்ற மாகாணத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட மக்கள், கொரோனோ பெருந்தொற்றை கட்டுப்படுத்த அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எதிர்த்து  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இப்போராட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் மூவர் மற்றும் லெப்டினன்ட் கவர்னர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

அதாவது முகக்கவச விதிமுறைகள் என்பது தங்கள் சுதந்திரத்திற்கு மாறாக மேற்கொள்ளப்பட்ட ஒடுக்குமுறை என்று தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாகாணத்தின் தலைமைச் செயலக வளாகத்தில் முன்பிருக்கும் படிக்கட்டுகளில் தாங்கள் கொண்டுவந்த நூறுக்கும் அதிகமான முகக்கவசங்ககளை தீ மூட்டி எரித்துள்ளனர்.

இதுகுறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் ஒரு சில மக்கள் கொரோனாவிற்கு  எதிராக மேற்கொள்ளப்பட்ட விதிமுறைகள், தங்கள் சுதந்திரத்தை கெடுப்பதாக எதிர்த்து வருகின்றனர். மேலும் இவர்கள் முக கவசம் அணியாமலும், தடுப்பூசி செலுத்தி கொள்ளாமலும் இருப்பதோடு, மற்ற பொது மக்களையும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டாம் என்று பிரச்சாரம் மேற்கொண்டு வருவதாகத் தெரியவந்துள்ளது.

Categories

Tech |