தமிழகத்தில் சமீப காலமாக அதிமுக இரண்டாக பிளவுப்பட்டு கொண்டிருக்கிறது. ஓபிஎஸ் மற்றும் ஈ பி எஸ் இருவரும் தனித்தனி அணிகளாக பிரிந்து மோதிக் கொண்டிருக்கின்றனர். இதனால் அதிமுக கூட்டணி கட்சிகளும் என்ன செய்வது என்று அறியாமல் முடித்துக் கொண்டிருக்கின்றன. அவ்வகையில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணியில் சமீப காலமாக விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இடம்பெறாது என பேச்சு அடிபட்டது. இந்நிலையில் பாஜகவுடன் கூட்டணி தொடர்வதா அல்லது வேண்டாமா என்பது குறித்து மாவட்ட செயலாளர்களுடன் இபிஎஸ் இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளார். இதில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதால் தமிழக அரசியலில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.