Categories
மாநில செய்திகள்

பரபரப்பு புகார்…! அரசின் மீது குற்றசாட்டு…. சிக்கலில் அதிமுக அமைச்சர் …!!

நெல் கொள்முதல் செய்ய தனியார் வங்கிகளில் கடன் பெற்றதன்மூலம் அமைச்சர் காமராஜ் நிர்வகிக்கும் உணவுத் துறையில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக தொழிற்சங்க நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும் தமிழகம் முழுவதும் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட 2 லட்சம் மெட்ரிக் டன் நெல் வீணாகி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.

உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நிர்வகிக்கும் இத்துறையின் கீழ் ஆட்சியாளர்கள் துணையுடன் அதிகாரிகள் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பெரும் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக புகார் எடுத்துள்ளனர்.

விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய ஏதுவாக மாநில அரசு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடன் பெறுவது வழக்கம். ஆனால் நடப்பாண்டில் மத்திய அரசு மாநில அரசுக்கான நிதியை ஒதுக்காததால் மாநில அரசு பத்தாயிரம் கோடி ரூபாய்க்கான கடனை தனியார் வங்கிகளில் பெற்றுள்ளது. இதற்கான வட்டியினை மாநில அரசு செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும்,  இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. மாநிலம் முழுவதும்  விவசாயிகளிடம் இருந்து வாங்கப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 2 லட்சம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையத்திலேயே தேங்கி கிடப்பதால் மழையிலும், வெயிலிலும் வீணாகி வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 41 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |