Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பரபரப்பு!!…. மருமகன் கத்தியால் குத்தி”மாமனார் படுகொலை” தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

3 பேரை கத்தியால் குத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தாணிச்சாஊரணி கிராமத்தில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பாலமுருகன் மது குடித்துவிட்டு செல்வியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் செல்வி சித்தானூர் சமத்துவபுரத்தில் அமைந்துள்ள தனது தந்தை பூமிநாதன் வீட்டிற்கு சென்று விட்டார். இதனை அறிந்த பாலமுருகன் மது குடித்துவிட்டு பூமிநாதன் வீட்டிற்கு சென்று  செல்வியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு தகராறு செய்துள்ளார்.

அப்போது செல்வி வீட்டிற்கு வர மறுத்ததால்   ஆத்திரமடைந்த பாலமுருகன் செல்வி,அவரது தந்தை, தாய்   ஆகிய 3 பேரையும் கத்தியால்  சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த 3 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பூமிநாதன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் செல்வி மற்றும் அவரது தாய் முனியத்தால் ஆகிய 2 பேருக்கும்  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருந்த பாலமுருகனை கைது செய்து அவரிடம் இருந்த கத்தி மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Categories

Tech |