வாலிபரை வெட்டி கொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்குடி பகுதியில் பிச்சைபிள்ளை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் செங்கல் சூளை ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் இடப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிச்சைபிள்ளையின் செங்கல் சூளைக்கு வந்த ரமேஷ் தகராறு செய்துள்ளார். மேலும் ரமேஷ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பிச்சைபிள்ளையை சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த பிச்சைபிள்ளையை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பிச்சைபிள்ளை பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரமேசை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.