Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பரப்பு!!… “சந்தையில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட மாணவர்கள் ” வைரலாகி வரும் வீடியோ காட்சி….!!!

சில மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாலக்காடு சாலை பகுதியில் சந்தை ஒன்று அமைந்துள்ளது. இந்த சந்தையில் நேற்று அதே பகுதியில் அமைந்துள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஒருவரை ஒருவர் கட்டையால் தாக்கியுள்ளனர். இதனை அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பொதுமக்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பன்னி அள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த 10-ஆம்  வகுப்பு மாணவனை, சக மாணவன் சரமாரியாக கத்தியால் குத்தியது  குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |