பரமக்குடி அருகே பெய்த கனமழை காரணமாக வீடுகள் முழுவதிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் அனைவரும் தஞ்சமடைந்துள்ளனர்.
பரமக்குடி தாலுகா, போகலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம பகுதிகளில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. அதனால் அப்பகுதியில் உள்ள வீடுகள் முழுவதிலும் மழைநீர் சூழ்ந்ததால், அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் விஷப்பூச்சிகள் தொல்லையால் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் மழை நீர் வடியாமல் தேங்கி இருப்பதால் கொசுக்கள் உருவாகி டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் அப்பகுதி மக்களுக்கு தேங்கியுள்ள மழைநீர் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று தேங்கியுள்ள மழை நீரை விரைவில் வெளியேற்றுவதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.