Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பரமக்குடியில் குரூப் 2 தேர்வு எழுதும் அறையில் செல்போன் வைத்திருந்த இளைஞர்…. ஆட்சியரின் ஆய்வில் வசமாக சிக்கினார்…!!!!

பரமக்குடியில் குரூப் 2 தேர்வு எழுதும் அறையில் செல்போன் வைத்திருந்த இளைஞர் வசமாக மாட்டிக் கொண்டார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடியில் இருக்கும் தனியார் பள்ளி தேர்வு மையமாக தேர்ந்தெடுக்கப்பட்டு குரூப்-2 தேர்வு நடைபெற்றது. இதில் 30 அறைகளில் 600 பேர் தேர்வு எழுதினார்கள். அப்போது மாவட்ட ஆட்சியர் தேர்வு மையத்தை பார்வையிட வந்த பொழுது செல்போன் ப்ளூடூதை ஆன் செய்து வந்தார். அப்போது அவருடைய  ப்ளூடூத்தில் வேறு செல்போன் இருப்பதற்கான சிக்னல் காண்பித்த உடனே போலீசாரை அழைத்து சோதனை செய்ய சொன்னார்.

இதையடுத்து போலீசார் ஒவ்வொரு அறையாக சென்று சோதனை நடத்தியபோது ஒரு அறையில் தேர்வு எழுதிய நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர் செல்போன் வைத்திருந்தது தெரிய வந்ததை அடுத்து அவரை உடனே ஆட்சியரிடம் அழைத்துச் சென்றார்கள். அவரிடம் விசாரணை செய்ததில் செல்போனை பயன்படுத்தி தேர்வு எழுதவில்லை எனவும் தேர்வு அறையில் செல்போன் வைத்திருந்ததும் தெரிய வந்ததால் அவரை தேர்வு மையத்தில் இருந்து வெளியேற்றினார்கள்.

Categories

Tech |