பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகரனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது.
பரமக்குடி சட்டமன்ற தொகுதி அதிமுக உறுப்பினர் சதன் பிரபாகரனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இவருக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சட்டமன்ற உறுப்பினரின் மகன் மற்றும் உதவியாளருக்கு கொரோனா கண்டறியப்பட்டு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணமே உள்ளது. தமிழகம் முழுதும் ஒட்டுமொத்தமாக 94 ஆயிரத்தை கடந்து இருக்கிறது கொரோனா பாதிப்பு.
உயிரிழப்பும் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பும் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் ஏற்கனவே சில சட்டமன்ற உறுப்பினருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்ட நிலையில் தற்போதைய செய்தியாக பரமக்குடி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகரனுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.