Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“பரம்பிக்குளம் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு”….. பாதுகாப்பு நடவடிக்கை…. உபரிநீர் வெளியேற்றம்…!!!!!

தொடர் கனமழை காரணமாக பரம்பிக்குளம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகே இருக்கும் பரம்பிக்குளம் அணையில் சென்ற சில மாதங்களாக பருவ மழை பெய்து வரும் காரணமாக அணையின் நீர்மட்டம் அதிகரித்தது. மேலும் சென்ற ஜூலை மாதம் அணை முழு கொள்ளளவை எட்டியது. இந்த நிலையில் சென்ற ஒரு வாரமாக மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழை பெய்து வருவதால் வினாடிக்கு 5500 கன அடி நீர்வரத்து அதிகரித்து இருக்கின்றது.

இந்த நிலையில் பரம்பிக்குளம் அணைக்கு சோலையார் அணையில் இருந்து 800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டிருக்கின்றது. சேடல் பாதை வழியாக 3000 கன அடி மற்றும் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை மூலம் அணைக்கு 1700 கன அடி நீர்வரத்து இருக்கின்றது. ஆழியார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்திருப்பதால் பாதுகாப்பு கருதி மதகுகள் வழியாக வினாடிக்கு 1200 கன அடி வெளியேற்றப்பட்டு வருகின்றது. இதனிடையே அணைகளுக்கு வரும் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.

Categories

Tech |