கோடை மழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் பரவலாக நல்ல மழை பெய்தது. இதை சுற்றியுள்ள மஞ்சூர், எமரால்டு, முத்தோரை பாலாடா போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் எருமாட்டு பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது.
இந்த மழையின் காரணமாக சாலைகளில் பல பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையின் காரணமாக வாழை மரங்கள் சாய்ந்தது. இதனையடுத்து பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் எமரால்டு பகுதியில் அதிகபட்சமாக 28 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.