மழையின் காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக சாலைகளில் தண்ணீர் வெள்ளமாக ஓடுகிறது. இந்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 242 கன அடி நீரும், பெருஞ்சாணி அணைக்கு விநாடிக்கு 88 கன அடி நீரும், சிற்றார் 2 அணைக்கு விநாடிக்கு 23 கன அடி தண்ணீரும் வருகிறது.
இந்நிலையில் திற்பரப்பு அருவியில் மழையின் காரணமாக வெள்ளம் கொட்டுகிறது. இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். மேலும் அருவியில் குளிக்கும் போது மழை பெய்ததால் சாரல் மழையில் நனைந்து கொண்டே உற்சாகமாக குளித்தனர்.