Categories
உலக செய்திகள்

பரவி வரும் மர்மமான நரம்பியல் நோய்…. காரணம் தெரியாமல் தவிக்கும் மருத்துவர்கள்…. தகவலை வெளியிட்ட ஆராச்சியாளர்கள்…!!

கனடாவில் ஏற்பட்டு வரும் மர்மமான நரம்பியல் நோய் குறித்த ஆராய்ச்சிகள் நடைபெறுவதாக பல்கலைக்கழக பேராசிரியர் தகவல் தெரிவித்துள்ளார்.

கனடாவில் உள்ள நியூபிரன்சுவிக் நகரில் கடந்த 2015 ம் ஆண்டிலிருந்து மர்மமான நரம்பியல் நோய் பரவி வருகின்றது. இந்த நரம்பியல் நோயால் இதுவரை 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஐந்து பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனிடையே நரம்பியல் நோய் ஏற்பட்டவர்களுக்கு உடல்களில் வலி, நினைவாற்றல் பிரச்சனை, பற்கள் அசைவது மற்றும் தசைப்பிடிப்பு போன்ற மோசமான அறிகுறிகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து நரம்பியல் பிரச்சனை ஒரு கிரெயிட்ஸ்பில்டட் ஜேகப் நோயாக இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகித்துள்ளனர். மேலும் நரம்பியல் நோய் நியூபிரன்சுவிக் நகரில் பரவி வருவதால் இது சுற்றுச்சூழல் பாதிப்புகளால் ஏற்பட்டிருக்கலாம் என்று கருதிய அவர்கள் அதற்கான ஆராய்ச்சிகள் மேற்கொண்டு உள்ளனர். ஆனால் அதில் உறுதிபட தகவல்கள் எதுவும்  கிடைக்கவில்லை.

இந்நிலையில் மர்மமான நோய்க்கான காரணத்தை கண்டுபிடிப்பதற்காக பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளதாகவும், ஒரு வருடத்திற்குள் எப்படியும் முடிவுகள் தெரிந்து விடும் என்று பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக பேராசிரியர் நீல் கஷ்மன் தகவல் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |