கொரோனா தொற்றில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான பிரான்சில் விமான போக்குவரத்து தடை செய்யப்படுவதாக அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.
உலகளவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பிரேசில் நாட்டில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா தொற்று தற்போது பிரான்சிலும் பல பேருக்கு பரவி வருகிறது. இதனை கண்டறிந்த மருத்துவதுறை நிபுணர்கள் மற்றும் சுகாதாரதுறை அதிகாரிகள் உடனடியாக பிரேசில் நாட்டுடனான போக்குவரத்தை தடை செய்ய வேண்டும் என அந்நாட்டு அரசிடம் வலியுறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து இந்த உருமாறிய கொரோனா தொற்று பிரேசில் மற்றும் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டதாகவும், தற்போது பிரான்சில் 6%க்கும் அதிகமானோருக்கு பரவி விட்டதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் ஆலிவர் வேரான் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அந்நாட்டு பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் நாட்டின் பாதுகாப்பிற்காக பிரேசில் மற்றும் பிரான்ஸ் இடையேயான அனைத்து விமான போக்குவரத்தையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.