நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.
மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளாவில் ஷிகெல்லா என்னும் புதிய வைரஸ் நோய் பரவி வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோழிக்கோடு வயநாடு மாவட்டங்களில் இந்த நோயால் பாதிக்கப்பட்டு 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த நோயால் மஞ்சரி என்ற 6 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். இதற்கு முன் கடந்த மாதம் 55 வயது முதியவர் இந்த நோயால் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.