மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய் சங்கர், தென் அமெரிக்காவுக்கு தன் முதல் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார். இதனையடுத்து பராகு வேயில் மகாத்மாகாந்தியின் சிலையினை அவர் திறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் மந்திரி ஜெய்ச ங்கர் ஆகஸ்ட் 22-27 வரையிலும் பிரேசில், பராகுவே மற்றும் அர்ஜென்டினா போன்ற நாடுகளுக்கு அதிகாரப்பூர்வ பயணமாக சென்று இருக்கிறார்.
இதற்கிடையில் பராகுவே தலைநகரான அசன்சியன் நகரின் முக்கியமான நீர் முனையில் சிலையை அமைத்துள்ள அசன்சியன் நகராட்சியின் முடிவைப் அவர் பாராட்டினார். இச்செயல் கொரோனா தொற்றுநோய் காலத்தின்போது மிக வலுவாக வெளிப்படுத்தப்பட்ட ஒற்றுமையின் அறிக்கையாகும் என அவர் குறிப்பிட்டார். அத்துடன் பராகுவேயில் புதியதாக திறக்கப்பட்டுள்ள இந்திய தூதரகத்தின் வளாகத்தையும் அவர் திறந்துவைக்கிறார். அங்கு சுமார் 2 நூற்றாண்டுகளுக்கு முன் பராகுவேயின் சுதந்திரபோராட்ட இயக்கம் துவங்கிய வரலாற்று சிறப்புமிக்க காசா டி லா இன்டிபென்டென்சியா பகுதியையும் அவர் பார்வையிட்டார்.