அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பராக் ஒபாமாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில் “கொரோனா பரிசோதனையின் போது எனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது ஆனால் எனது மனைவிக்கு தொற்று இல்லை. நானும் எனது மனைவியும் தடுப்பூசி பூஸ்டர் எடுத்துக்கொண்டோம். கொரோனா தொற்று குறைந்துகொண்டே வந்தாலும் தடுப்பூசி போட்டுக் கொள்வது சிறந்தது” என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா “பூரண நலம் பெற்று விரைவில் குணமடைய வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
My best wishes @BarackObama for your quick recovery from COVID-19, and for your family's good health and wellbeing. https://t.co/mCrUvXlsAp
— Narendra Modi (@narendramodi) March 14, 2022