Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பரிகாரம் செய்வது போல நடித்து…. தங்க நகையை அபேஸ் செய்த மர்ம நபர்கள்….. போலீஸ் வலைவீச்சு….!!!

நூதன முறையில் பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விருப்பாச்சி பகுதியில் வாசு என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு முருகேஸ்வரி(50) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கடையின் பின்புறத்தில் இருக்கும் வீட்டில் முருகேஸ்வரியும் அவரது மகன் ராகுலும் இருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ஜோதிடம் பார்ப்பதாக கூறியுள்ளனர். அப்போது மர்ம நபர்கள் உங்கள் ஜாதகத்தில் தோஷம் இருப்பதால் பரிகாரம் செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். இதனை அடுத்து பரிகாரம் செய்வதற்கு தங்க நகையை கழற்றி கொடுங்கள் என அந்த மர்ம நபர்கள் கூறியுள்ளனர்.

இதனை நம்பிய முருகேஸ்வரி 2 பவுன் தங்க சங்கிலியை கழற்றி அவர்களிடம் கொடுத்தபோது மர்ம நபர்கள் பூஜை செய்வது போல நடித்தனர். இதனை அடுத்து அருகில் இருக்கும் கோவிலில் தங்க நகையை வைத்து பூஜை செய்துவிட்டு வருவதாக கூறி சென்ற மர்ம நபர்கள் திரும்பி வரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முருகேஸ்வரி சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |