Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பரிசுப்பொருள் அனுப்புறேன்…. பணம் அனுப்புங்க…. நம்பி 3 லட்சத்தை இழந்த வாலிபர்…. மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு..!!

பரிசு பொருளை அனுப்புவதாக கூறி வாலிபரிடம் ரூ மூன்று லட்சத்தை அபேஸ் செய்த மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தாலுகா கலித்திரம்பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் 22 வயதுடைய பிரவீன்குமார். இவருக்கு பேஸ்புக் மூலம் ஒரு நபர் நண்பராக அறிமுகமாகியுள்ளார். அதன்பின் அந்த நபர் தன்னுடைய மொபைல் போனிலிருந்து பிரவின் குமாருக்கு வாட்ஸ்அப் மூலமாக பரிசுப் பொருட்களை அனுப்பி உள்ளதாக தகவலை பதிவு செய்தார்.

அதன் பின்னர் கடந்த ஜனவரி14 – ம் தேதி வெவ்வேறு மொபைலிலிருந்து பிரவீன் குமாரை தொடர்புகொண்ட அந்த நபர் கூரியர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து பரிசுப் பொருட்களை பெறுவதற்கு டெலிவரி கட்டணம், கூரியர் கட்டணம் என்று தெரிவித்து பணம் செலுத்துமாறு கூறியுள்ளார். இதை நம்பிய பிரவீன்குமார் அந்த நபர் தெரிவித்த இரண்டு வங்கிகளின் கணக்குகளுக்கு மொத்தமாக ரூ 2,93,500 செலுத்தியுள்ளார்.

அதன்பிறகு அந்த நபர் பணத்தை பெற்றுக்கொண்டு பிரவீன் குமாருக்கு எந்த ஒரு பரிசுப் பொருட்களையும் அனுப்பவில்லை. பணத்தை மோசடி செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து பிரவீன்குமார் விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிசங்கர் மற்றும் காவல்துறையினர் வழக்குப் பதிந்து பணத்தை அபேஸ் செய்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Categories

Tech |