17 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்டு கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள காலனியில் சதீஷ்குமார் (20) என்ற வாலிபர் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் அந்த சிறுமி தற்போது 5 மாத கர்ப்பமாக உள்ளதால் பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சென்றார்.
அப்போது சிறுமியின் வயதை உறுதிபடுத்தி கொண்ட மருத்துவர்கள் உடனடியாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையறிந்த குழந்தை நல அதிகாரிகள் நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறுமியை கர்ப்பமாக்கிய சதீஷ்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்துள்ளனர்.